Term insurance டேர்ம் இன்ஷுரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள்
டேர்ம் இன்ஷுரன்ஸ் ஏன் எடுக்க வேண்டும்? குடும்பத்தில் வேலைக்கு செல்லும் அல்லது குடும்பத்தில் தொழில் செய்து சம்பாரிக்கும் நபர் ஏதேனும் வியாதி மூலம் அல்லது விபத்து மூலம் இறந்து விட்டால் பாதிக்கப்படும் அவரது குடும்பத்திற்கு வாழ்வாரம் பாதிக்கப்படும். மேலும் இறந்த நபர் கடன் ஏதும் வைத்து இருந்தால் அதுவும் சேர்ந்து குடும்பத்தை நிலை குலைய செய்து விடும். இந்த நிலை வராமல் தடுக்க டேர்ம் இன்ஷுரன்ஸ் அவசியம்.
டேர்ம் இன்ஷுரன்ஸ் எவ்வளவு காலம் எடுக்கலாம்?
Term insurance பொறுத்த வரை வேலை செய்யும் வயது அதாவது 60 வயது வரை எடுத்தால் போதும். அதற்கு மேல் உங்களை நிதிநிலை தொடர்பாக யாரும் சார்ந்து இருக்கும் நிலை இருந்தால் மட்டும் எடுக்கலாம்
டேர்ம் இன்ஷுரன்ஸ் எவ்வளவு கவர் தேவை?
பொதுவாக உங்கள் ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு + கடன்= டேர்ம் இன்ஷுரன்ஸ் கவர்
அதாவது உங்கள் ஆண்டு வருமானம் 5 லட்சம் மற்றும் உங்கள் கடன் 25 லட்சம் என வைத்து கொண்டால்
உங்களுக்கு தேவையான காப்பீடு 500000 x 20 + 2500000= 1 கோடி 25 லட்சம்
டேர்ம் இன்ஷுரன்ஸ் எப்போது எடுக்கலாம்?
முடிந்த அளவு இளம் வயதில் எடுப்பது நல்லது
உதாரணமாக 1 கோடி கவர் மற்றும் 60 வயது வரை பாலிசி என வைத்து கொண்டால்
30 வயதில் பிரிமியம் 14200
40 வயதில் பிரிமியம் 30300 என உள்ளது.
பாலிசி எடுக்கும் போது கவனிக்க வேண்டியது?
புகை பழக்கம், மது பழக்கம் இருந்தால் அதை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சொல்லி பாலிசி எடுக்க வேண்டும் அப்போது தான் கிளைம் செய்வதில் பிரச்னை இருக்காது.
மேலும் பிறந்தது முதல் செய்துள்ள முக்கிய அறுவை சிகிச்சை மற்றும் சுகர்,கொலஸ்ட்ரால், தைராய்டு, இரத்த அழுத்தம், என நோய்கள் இருந்தாலும் சொல்லி பாலிசி எடுக்க வேண்டும்
ஹெல்த் செக் அப் செய்து பாலிசி தரும் நிறுவனத்தில் பாலிசி எடுத்தால் பின்னாளில் நீங்க உங்க உடல் நிலையை மறைச்சி பாலிசி எடுத்தீங்கனு நிறுவனம் சொல்ல முடியாது.
பாலிசி எடுக்கும் போது விபத்து கவர் சேர்த்து எடுக்கவும் ஏன் என்றால் விபத்தில் உடல் ஊனம் ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் கூட கவர் கிடைக்கும்..
மருத்துவ காப்பீடு இல்லை என்னும் பட்சத்தில் critical illnesses கவர் சேர்த்து எடுக்கவும் இது பின்னாளில் ஏதேனும் கடுமையான நோய் ஏற்பட்டாலும் கிளைம் செய்யலாம்.
எந்த நிறுவன பாலிசி எடுக்கலாம்?
காப்பீடு திட்டத்தை பொறுத்த வரை பல ஆண்டுகள் சந்தையில் உள்ள நிறுவனம்.
அதிகமான அலுவலகம் உள்ள நிறுவனம் பார்க்க வேண்டும்
மேலும் claim settlement ratio ( முதிர்ச்சி , சரண்டர், இறப்பு என எல்லா கிளைம் சேர்ந்தது) பார்த்து ஏமாறாமல் இறப்பு பலன் நிராகரிப்பு death claim rejection ratio பார்த்து வாங்கவும்.
மேலும் பிரிமியம் தள்ளுபடி பார்த்து வாங்காமல் ஏஜெண்ட் மூலம் வாங்குங்க. நாளைக்கு கிளைம் செய்யும் போது ஏஜெண்ட் உதவி குடும்பத்திற்கு அவசியம்.
இந்த தகவல் பிடித்து இருந்தால் follow செய்யவும்
நிறைய பேருக்கு இந்த தகவல் சென்று சேர தயவு செய்து RT செய்யவும்
Term insurance எடுக்க DM செய்யவும்.
#lifeinsurance#PersonalFinanceIndia#insurance#Lic#lifeinsurance#insuranceclaims #terminsurance#kapeetuthalam
*நீங்கள் கஷ்டப்படும் போது நன்றாக கவனித்துப் பாருங்கள் அதில் ஒரு துணிச்சல் தென்படும்..*
அதை அப்படியே தொடர்ந்து கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறுவோம்...
1930 அப்போதைய மெட்ராஸ்.
15 வயசு சிறுமிக்கும்,
18 வயது சிறுவனுக்கு கல்யாணம்.
மூணே வருஷம். பையன் செத்து போனான். விதவை ஆன அவள் ஆறு மாச கர்ப்பம். பிறகு அந்த குழந்தை பெண்ணிற்கு குழந்தை பிறந்தது.
அந்த குடும்பத்தில் எந்த கேள்வியும் இல்லை. எந்த பதிலும் இல்லை. ஆழ்ந்த மவுனம் மட்டுமே. கையில் குழந்தையுடன் விட்டத்தை பார்த்து உட்காருவதே அவள் வாழ்க்கை ஆயிற்று.
போதும் இந்த தனிமை. வெறுமை என அவள் அப்போது எடுத்த முடிவை சந்திக்க அப்போதைய இந்தியா தயாராக வில்லை. அது அதிர்ந்து போனது.
அவள் அப்பா பாப்பு சுப்பாராவ், ஒரு பொறியியல் கல்லூரியில் எலக்டிரிக்கல் என்ஜினியரிங் பேராசிரியர். அவரை பார்த்து இந்த பெண் தலையில் சுரீர் என ஒரு பல்பு எரிந்தது. அது அவளது வாழ்க்கையை மட்டுமல்ல. லட்சக்கணக்கான இந்திய பெண்களின் எதிர்காலத்தையே மாற்றியது.
சென்னை கிண்டி என்ஜினியரிங் கல்லூரியில், எலக்ட்ரிக்கல் பட்டதாரி வகுப்பில் சேர்ந்தாள். ஆனால், அது அவ்வளவு சுலபம் ஆக இருக்க வில்லை. முழுக்க முழுக்க ஆண்கள் நிறைந்த கல்லூரியில் இவள் ஒருத்தி மட்டுமே பெண்.
அது வரை முறை வாசல் வேலைக்காக கூட எந்த இரு பெண்ணையும் பார்த்திராத காலேஜ். தன்னந்தனியே வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்.
தன் காலில் நின்று தன் குழந்தையை வளர்த்து பெரிய ஆளாக்க வேண்டும் என்கிற ஒற்றை வேள்வித் தீ அவள் மனதில் பற்றி எரிய, 1943 ஆம் ஆண்டு அவள் என்ஜினியர் ஆனாள். இந்தியாவின் முதல் பெண் என்ஜினியர் இவள்தான்,
மற்றவர்கள் எல்லாம் இந்த இளம் விதவை மீது மாறுபட்ட பார்வைகளை வீசினாலும், கல்லூரி பரிந்துரையால்,
இந்தியாவின் மிகப்பெரிய பக்ரா நங்கல் அணையின் டிரான்ஸ்மிஷன் லைன்களை வரையும் வேலை கிடைத்தது. கட்டுமானங்களை, நாடுகள் எழுப்பிக் கொண்டு இருந்த போது, இவள் அவற்றை ஒளிமயமாக்கி கொண்டு இருந்தாள்.
கொல்கத்தாவின் அசோசிடியேட்டட் எலக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
சிஸ்டம் டிசைனிங், பழுதுகளை சரி ஆக்குதல் என
30 ஆண்டுகள் அவள் அங்கு உழைத்தாள்.
அந்த காலத்தில் விதவைகள் எங்கும் பயணம் செய்யக்கூடாது என்பதால், சைட்டுக்கு விசிட் செய்யும் வாய்ப்பு மட்டும் இவளுக்கு மறுக்கப்பட்டது. அவள் இதை எதிர்த்து கலகம் செய்ய வில்லை. அதையும் ஒரு வாய்ப்பாக்கி, துல்லிய எலக்ட்ரிக்கல் டிசைன்களை வடிவமைத்து தருவதில் கவனம் செலுத்தி சாதனை படைத்தாள். கிரிட்டுகள்களுக்கு மின் சக்தி அளித்தாள்.
1964. நியூயார்க்.
முதல் சர்வதேச மகளிர் இன்ஜினியர்கள் மற்றும் சயின்டிஸ்ட்டுகளி ன் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பெண் இவள்தான். சேலை உடுத்தி கொண்டு கம்பீரமாக நடந்து அந்த மாநாட்டில் ஒரு கலக்கு கலக்கினார். ஆனால், இந்த தேசத்துக்கு இவள் பெயர் கூட தெரியாது.
1966.
லண்டனின் இன்ஸ்டிட்யூட் ஆப் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்-கில், முழு நேர உறுப்பினர் ஆனாள்.
நமது பாட நூல்கள், எஞ்சியரிங் கல்லூரிகள், நாட்டின் அணைகள், கிரிட்டுகள் எல்லாவற்றிலும் எத்தனை வோல்டேஜ் என குறிப்பிட பட்டு இருக்கும். ஆனால், ஒன்றில் கூட அவற்றை மின்மயமாக்கிய இவள் பெயர் இருக்காது.
அப்பேர்ப்பட்ட அவள் பெயர்:
அய்யல சோமாயஜுல லலிதா.
இந்தியா மதிக்கத் தவறிய, இந்தியா மறந்து போன இந்தியாவின் முதல் பெண் என்ஜினியர்...!
அணைத்து என்ஜினீயர்களுக்கு இந்த திரேட் சமர்ப்பணம் 🙏
#SSRThreads
ஒரு தந்தையின் முகநூல் பதிவு:நேற்று திருநெல்வேலி பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் பஸ்சுக்காக காத்திருந்த போது என் மகள் என்னிடம் சொன்னாள்.
"அப்பா.. டாய்லெட் போகணும்"
அங்கிருந்த கடைகளில் உட்கார்ந்திருந்த சிலரிடம் டாய்லெட் எங்கிருக்கிறது என்று கேட்டு, டாய்லெட்டை நோக்கி போய் கொண்டிருக்கும் போதே மகள் சொன்னாள்,
"அப்பா. டிஸ்யூ பேப்பரும் வேணும்பா"
அவள் கேட்டது சரிதான்.. நம்ம ஊரு டாய்லெட் கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும் என்று யோசித்து கொண்டே, அருகே இருந்த ஒரு கடையில் 50 ரூபாய் கொடுத்து ஒரு டிஸ்யூ பேப்பர் பாக்கெட் வாங்கி கொண்டேன்..
கடைசியில் டாய்லெட் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, டாய்லெட் முன் நின்று, என் மகளின் முகத்தை பார்த்த போது அவள் சொன்னாள், "அப்பா.. ரொம்ப இருட்டா இருக்குப்பா.. டாய்லெட் மாதிரியே இல்ல.. உள்ளே போகவே ரொம்ப பயமா இருக்குப்பா.."
"கொஞ்சம் பொறுத்துக்கடா.. ஒன்லி டூ ஆர் த்ரீ மினிட்ஸ்"..
அரைகுறை மனதாய் அவள் உள்ளே போக எத்தனிக்கும் போது,
"எம்மா.. பைசாவை தந்துட்டு போ" என்கிற குரல் பின்னே கேட்டது..
திரும்பியபோது அங்கே "நவீன கட்டண கழிப்பிடம்" என்கிற போர்டுக்கு முன்னாடி ஒருத்தர் வெள்ளையும் கருப்புமான மார்பு முடி தெரிய ஒரு பனியனோடு டேபிள் போட்டு கத்தியபடி கர்ண கடூரமாய் உட்கார்ந்திருந்தார்..
பத்து ரூபாய் அவர் கேட்க அதை கொடுத்து விட்டு, என் மகளை கொஞ்சம் பலவந்த படுத்தி உள்ளே போக வைத்தேன்..
தண்ணீரும் சாக்கடையுமாய் தரையில் கிடந்த சகதியை பார்த்து காலை பவ்யமாய் வைத்து உள்ளே போனவள், போன வாக்கிலேயே திரும்பி வந்தாள்..
"என்னம்மா.. என்ன ஆச்சு?"
"முடியலப்பா.. ரொம்ப மோசமா இருக்கு.. "
எனக்கு தர்ம சங்கடமா போயிற்று..
"கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாதாடா"
"இல்லப்பா.. முடியலப்பா..."
நான் மலங்க மலங்க விழித்தேன்..
என் சஞ்சல முகத்தை பார்த்தவள், "பரவாயில்லப்பா.. நான் சமாளிச்சுகிறேன்.. நம்ம வீட்டுக்கு போயி பாத்துக்கலாம்பா"
கையாலாகாத தகப்பனாய்
என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தேன் நான்..
திரும்ப அங்கிருந்து நாகர்கோவில் பஸ் பிடிச்சு, அங்கிருந்து தக்கலை சேர்ந்து, அங்கிருந்து வீட்டுக்கு போயி சேரணும்னா இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்.. ஒரு ஆணா இருந்தா எங்கேயாவது ஒரு சுவற்றோரம் ஒதுங்கிக்கலாம்.. ஆனா ஒரு பெண் பிள்ளை எப்படி தாங்கிக்கும்..? நெஞ்சுக்குள் எனக்கு பிரஸ்ஸர் கூடியது...
கடைசியில் அரைகுறை மனதோடு, நாகர்கோவில் பஸ்சில் ஏறினேன்..
அங்கிருந்து நாகர்கோவில் வரும் வழி முழுக்க என் மகளின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் என் மனசு வலித்தது...
மனசுக்குள் என்னவெல்லாமோ யோசனைகள் ஓடிற்று..
"இதோ..இந்தியாவை வல்லரசாக்கி விடுவேன்" என்கிற தேசிய தலைவர்களில் இருந்து, விடியலை நோக்கி பயணிக்கும் மாநில தலைவர்களின் முகம் வரை எல்லாருடைய முகங்களும் கையாலாகாத தலைவர்களாய் எனக்குள் வந்து போனார்கள்..
"அதெப்படி, என் மகளால் முடியாதது இங்கிருப்பவர்களால் மட்டும் முடிகிறது?.. எத்தனையோ பெண்கள் அந்த கழிப்படத்திற்குள் வரிசையாக நுழைகிறார்கள்.. தங்கள் இயற்கை உபாதையை முடித்து உடனே திரும்புகிறார்கள்.. ஆனால், என் மகளால் மட்டும் ஏன் முடியவில்லை?..
இப்படியும் ஒரு யோசனை கூடவே வந்தது..
காரணம், நாம் பழக்கப்பட்டு விட்டோம்.... நான் உட்பட நாம் எல்லோருமே இப்படிபட்ட கழிவறைகளுக்கு பழக்க பட்டு விட்டோம்.. நம் எல்லோருக்கும் இந்த நாற்றம் பழகி விட்டது.. இந்த தண்ணீரும் சாக்கடையும் சேர்ந்த இந்த சகதி பழகி விட்டது.. கச கசவென்ற இந்த சகதிக்கு மத்தியில் கீழே விழாமல் எப்படி பாலன்ஸ் செய்து நடக்க வேண்டும் என்கிற கலை நமக்கு அத்துப்படியாகி விட்டது... மூன்று நான்கு நிமிடம் தம் பிடித்து வெளியே வரும் யுக்தி நமக்கு சாதாரணமாகி விட்டது.. அங்கே டேபிள் போட்டு உட்கார்ந்திருக்கும் மனிதனின் மரியாதை தெரியாத, அநாகரிக பேச்சும் கூட கேட்டு கேட்டு நமக்கு மரத்து போயிற்று..
என் மகளுக்கு சிறு வயது.... அவளுக்கு இது பழக்கம் இல்லை.. என்ன தெரியும் அந்த சின்ன பிஞ்சுக்கு..?
ஆனால், காலப்போக்கில் அவளும் பழகி கொள்வாள்.. மற்றவர்கள் போல, மூன்று நான்கு நிமிடம் தம் பிடித்து வெளியே வர பழகி கொள்வாள்.. தண்ணீரும் சாக்கடையும் நிறைந்த சகதியில் எப்படி பாலன்ஸ் செய்து கொள்ள வேண்டும் என்று அவளும் தெரிந்து கொள்வாள்... இந்த நாற்றத்தோடு எப்படி வாழ்க்கையை நகர்த்த வேண்டும் என்பது அவளுக்கும் பழகிப்போகும்.. மார்பு முடி தெரிய உட்கார்ந்திருக்கும் இந்த கடூரமான மனிதர்களும் கூட அவளுக்கு பழகி போவார்கள்...
இவைகள் எல்லாமுமே ஒருநாள் அவளுக்கு மரத்தும் போகும்...
ரெக்சன்..
கீழே 👇
திருநெல்வேலி பஸ் நிலையத்திற்குள் இருக்கும் #நவீனகட்டணகழிப்பறை
விரும்பிய,
விரும்பாத
நிகழ்வுகள்
வாழ்க்கையில்
ஒரு அம்சம்...
புன்சிரிப்பு
இவையனைத்தையும்
மாற்றும் வல்லமை
கொண்ட சிறப்பம்சம்...
சிரித்து சிரிக்க
வைத்து வாழ்க 😍
எது ரசிக்கப்பட்டதோ அதுவே ஒருநாள் சலிப்பாகும்.
எது பிரம்மிக்கப்பட்டதோ அதுவே வெறுக்கவும் படும்.
எது அற்புதமானது என்று போற்றப்பட்டதோ,
அதுவே ஒருநாள் குப்பையாகவும் போகும்.
மனித மனங்கள் அவ்வளவுதான்.
~ யாசகன் ~
@tvsmotorcompany
i am recently serviced my vehicle in tirupur dharapuram road service centre. that service centre adviser and show room staffs very poor customer communication and rough and tuff speech. i am very disappointed so please check your
show room
1K Followers 1K FollowingDesigner - A creative soul with nothing to prove to anyone. My creations are for my own enjoyments and for the love of the art. captivating and addicting thing.
6K Followers 2 Followingவணிகம், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, பிராண்டிங் மற்றும் தொழில் முனைவோர் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு பிரத்யேக தளம்.
42K Followers 56 FollowingSenior Consultant Urologist/Sex Med Doc/Kidney Transplant Surgeon/Sexuality Educator/ DRAVIDIAN STOCK. Tweets strictly in personal capacity. RT≠ Endorsement.
7K Followers 571 Followingநிறுவனர் - தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
#TNMDEWA Dairy and Agro Products Private Limited
2021-பெரம்பூர் சட்டமன்ற தொகுதி #MNM வேட்பாளர்.
1K Followers 214 FollowingGuest Speaker @MaranaVilas |
'Life is too short to argue, just say pikachu and move on'
https://t.co/lrhz4i1yiB , https://t.co/dLpNAWFJYh , https://t.co/D60UjVkMjx
20K Followers 784 FollowingI DON'T RUN ANY PAID CHANNEL ❌️
NISM CERTIFIED ❤️
Equity Trader 📈
not sebi registered, all posts for educational purpose 🚨
My Email: [email protected]
5K Followers 4K FollowingThe official handle for Gumbala Suthuvom YT channel. We share informative and travel videos of Tamil people from Sweden- Multiple admins♥️
https://t.co/OQTD6hFzQn
283 Followers 180 Followingj u s t a n e c h o s e a r c h i n g f o r t h e
s o u n d . . . . . . . .
ₜ ₕ ₐ ₜ 'ₛ ₐ ₗ ᵣ ₑ ₐ d ᵧ ₚ ₐ ₛ ₛ ₑ d
#கவிதை_மாரத்தான்
4K Followers 178 FollowingSr. Correspondent, Anchor & Prime Time Debate Moderator @PTTVNewsX | CBE Girl | Balancing news, words & melodies (Views are personal)
1K Followers 1K FollowingDesigner - A creative soul with nothing to prove to anyone. My creations are for my own enjoyments and for the love of the art. captivating and addicting thing.