மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் திமுக - அதிமுக - பாஜக கூட்டுச்சதியாலும், மக்களின் தீர்ப்பை திருட முயற்சித்த அயோக்கியத்தனத்தாலும் உருவாக்கப்பட்ட இடைத்தேர்தல்கள்.
தேர்தல் களத்தில் முழுக்க முழுக்க திமுக - அதிமுக - பாஜக கூட்டியக்கம் ஒருங்கிணைந்து வேலைசெய்துள்ளது.
தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியல் களத்தை, சாதிய உள்புகைச்சலை வளர்த்தெடுப்பதன் மூலம் மத அபாயத்தின் காலடியில் சமர்ப்பிக்க திமுக - அதிமுக அடிமைத்தலைமைகள் முழுக்கத்தயாராகிவிட்டார்கள்.
சட்டமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பை பிரதானப்படுத்திய திமுகவும், அதன் கோமாளித்தலைவர் ஸ்டாலினும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு இடத்திலும் பாஜகவை பற்றி மூச்சுவிடவில்லை.
இடைத்தேர்தலுக்கு நடுவே முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற குழுக்களில் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமைப்பதவியை பெற்றுள்ளார்கள். மற்ற எதிர்க்கட்சிகள் இல்லாமல் பாஜகவுடன் தனிபேரம் பேசி இந்த குழுத்தலைமை பதவிகளை திமுக பெற்றுக்கொண்டுள்ளது. பாஜக அமைச்சரவையில் இணைவதற்கான அதிகாரப்பூர்வ ஒத்திகை இது!
SIR-ஆல் தோற்றுவிட்டோம் என அக்மார்க் கஞ்சா கசக்கி போல கையை தேய்த்துக்காட்டும் ஒப்பாரித்திலகம் மு.க.ஸ்டாலின், SIR ஐ பாஜகவுக்கு எதிரான அரசியலாக்காமல் தவெகவுக்கு எதிரான அரசியலாக மாற்றும் கண்ணீர் ட்ராமாவின் பின்னணி இதுதான்!
இந்தக் கள்ளக்கூட்டணியை மறைக்கவே மொத்த பிரச்சாரத்தையும் ஆபாச, வக்கிரத்தாக்குதல் முகாமாக திமுக கட்டமைத்துள்ளது.
அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் 2024ல் தமிழர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்த வாக்குகளை, அரசியலமைப்பை படுகொலை செய்து தமிழ்நாட்டு இளைஞர்களின் ஆட்சியை - சாமானிய மக்களின் ஆட்சியை கலைப்பதற்காக திமுக உள்வாடகைக்கு விற்றுப்பிழைக்க தயாராகிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் குடும்பத்தலைவர், ஆருயிர் அண்ணன் விஜய் அவர்கள் ஆட்சி அமைத்த 4 மாதங்களில் சுமார் 75,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 25 லட்சம் குடும்பங்களை பலனடையச் செய்யும் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம், 5 ஆண்டுகளில் சுமார் 400 கோடி எண்ணிக்கையிலான கட்டணமில்லா பயணங்களை உறுதிசெய்யும் மகளிர் வெற்றிப்பயணம் திட்டம், நாள்தோறும் கூடுதலாக 15 லட்சம் மாணவர்களை பலனடையச்செய்யும் காலை உணவுத்திட்ட விரிவாக்கம், 3.1 லட்சம் பால் உற்பத்தியாளர்களை பலனடைச்செய்யும் வகையில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டும், லட்சக்கணக்கான நுகர்வோர் பால் விலை உயர்த்தப்படவில்லை! 14 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 6300 கோடி விவசாயக்கடன் தள்ளுபடி என ஊழல் சாக்கடையில் தேங்கியிருந்த மக்கள் வரிப்பணம் நலத்திட்டங்களாக திருப்பிவிடப்பட்டுள்ளது.
இந்த சாமானியருக்கான நல்லாட்சியை ஒழிக்க நினைக்கும் திமுக - அதிமுகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை படுகொலை செய்வதற்கான துருப்புச்சீட்டாக மாறிவிடும்.
எனவே, தாராபுரம், மதுராந்தகம் பொது மக்கள் இந்த இடைத்தேர்தலில் அளிக்கும் வாக்குகள் இந்த அதிகார வெறிபிடித்த பாசிச பண்ணையார் கூட்டணிக்கு சம்மட்டி அடியாகவும், ஆபாச வக்கிர வாரிசுகளுக்கு செருப்படியாகவும் அமைய வேண்டும்.
சாமானியரின் அரசியல் அதிகாரத்துக்கும், பாசிச பண்ணையார் கூட்டத்துக்கும் நடக்கும் இந்த ஜனநாயக யுத்தத்தில் தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவரான அண்ணன் விஜய்யின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும் என அண்ணன் விஜய்யின் உறவாய், நட்பாய் இந்த அரசியல் களத்தில் நிற்கும் சாமானிய வீட்டுப்பிள்ளைகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
போடுங்கம்மா ஓட்டு!
நம்ம விசில் சின்னத்த பாத்து!
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் மக்களே!
நான்கு மாத காலத்தில், பல நெருக்கடிகளுக்கு மத்தியில் அளித்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. வெளிப்படையான நிர்வாகமும் தூய மக்களாட்சியும் நல்கும் வெற்றித் தலைவர், உங்களது நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பார்.
பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்க, வெற்றியின் அடையாளமாம் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
பெண்களின் கண்ணியம் காக்க, உங்க மகன், உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க தோழன் விஜய்யின் விசில் சின்னத்தில் வாக்களியுங்கள்.
வெற்றி நிச்சயம்!
கொளத்தூரில் மக்களால் கோமாளி ஆக்கப்பட்ட ஒருவர், மக்கள் சக்தியின் பேராதரவு பெற்றவரைப் ஆதரிக்கும் தமிழக மக்களைக் கோமாளிக் கூட்டம் என்று கொக்கரிக்கிறார்.
சீனியர் கோமாளியாக இருந்துகொண்டு, ஜூனியர் கோமாளியையும் தன்னைப் போலவே ஆபாசக் கோமாளியாகவும் அவதூறு கோமாளியாகவும் வன்மக் கோமாளியாகவும் வக்கிரக் கோமாளியாகவும் வளர்த்து, தமிழ்நாடு முழுக்க வலம் வரச் செய்கிறார். ஆபாசமாகவும் அவதூறாகவும் கண்டதையும் உளறிக் கொட்டி சீனியரும் ஜூனியரும் சேர்ந்து உலகக் கோமாளிகள் வரிசையில் இடம்பெறத் துடித்து இயங்கி வருகின்றனர்.
மக்களை ஏமாளிகளாக நினைத்து வெற்று விளம்பர மாடல் அரசு நடத்தி ஏமாற்றி வந்த இந்த கோமாளிக் கும்பலை, ஆட்சி அதிகார எல்லைக்குள்கூட வரவிடாமல் மக்கள் துரத்திய விரக்தியில், இன்னும் அதிக அளவிலானக் கோமாளிக் கூத்துக்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இனி எத்தனை குட்டிக்கரணங்கள் போட்டாலும் இந்த சீனியர் கோமாளியும் அவர் தன் கூடவே சுமந்து அலையும் ஜூனியர் கோமாளியும் அவர்களுடன் பக்கவாத்தியம் வாசித்துக்கொண்டு அலையும் கோமாளிகள் கும்பலும் மக்களால் நிரந்தரமாக நிராகரிக்கப்படுவது உறுதி.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு ஸ்டாலின் அவர்கள் திருமதி சத்தியபாமா அக்காவை உருவகேலி செய்துள்ளது தவறானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தேர்தல் பிரச்சாரமா? பெண்களை கேலி செய்யும் பிரச்சாரமா? பெண்களை இப்படி உருவக்கேலி செய்வதுதான் உங்கள் அரசியலா? மக்களின் வாக்குகளை கேட்கச் செல்லும் அரசியல் கட்சிகளுக்கு பெண்களின் கண்ணியம் குறித்து எந்தப் பொறுப்பும் இல்லையா?
பெண்களைப் பற்றி அவமதிக்கும் வகையில் பேசுவது ஒரு தனிநபரை மட்டும் பாதிக்கும் விஷயம் அல்ல. அது ஒட்டுமொத்த பெண்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் அவமதிக்கும் செயல்.
அரசியல் மேடைகளில் பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கு கைதட்டல் கிடைப்பதாக நினைத்தால், அது அரசியலின் வெற்றியல்ல அரசியல் பண்பாட்டின் வீழ்ச்சி.
திரு ஸ்டாலின் அவர்கள் இதற்கு உடனடியாக விளக்கம் அளிப்பதுடன், பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்.
மன்னிப்பு கேள்!
மன்னிப்பு கேள்!!
#ShameOnStalin
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின்... நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில்... அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார்.
அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்.
This is DMK's DNA
தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand#தமிழகவெற்றிக்கழகம்#TVK
“வெற்றிப் பயணம்” திட்டத்தின் கீழ் மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay#VettriPayanam
அகிம்சை என்னும் பேராயுதத்தால் உலகையே வியக்க வைத்து, இந்தியத் திருநாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத்தந்த மாபெரும் தலைவர், நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் அவரது தேசப்பற்றையும், தியாக வாழ்வையும் போற்றி வணங்குகிறேன்.
எளிமை, நேர்மை, மனிதநேயம், சமத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைத் தனது வாழ்வின் நெறிகளாகக் கொண்டு, உலகம் முழுமைக்கும் அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்பிய மாமனிதராகத் திகழ்ந்தவர்.
மகாத்மா காந்தியடிகளின் கனவுகளை நனவாக்கி, அமைதியும், நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தழைத்திடும் சமூகத்தை உருவாக்கி, நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து, அவர் காட்டிய அறவழியில் நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!
#CMJosephVijay#GandhiJayanti
எளிமையான வாழ்க்கையாலும், நேர்மையான நிர்வாகத்தாலும் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்!
கிராமந்தோறும் பள்ளிகளைத் திறந்து, மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி கல்விப் புரட்சிக்கு வித்திட்டதோடு, எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள், அணைகள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கி, தொழில் முன்னேற்றத்திற்கும், வேளாண் வளர்ச்சிக்கும் வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.
தன்னலமற்ற பொதுச்சேவைக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த கர்மவீரரின் ஒப்பற்ற தியாகத்தைப் போற்றி அவர் காட்டிய நல்வழியில் தொடர்ந்து பயணிப்போம்!
அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்க மோதிரம் கொள்முதல் தொடர்பாக 30.09.2026 அன்று வெளியான செய்தித்தான் விமர்சனத்திற்கு பதில் அறிக்கை கீழ்கண்டவாறு அளிக்கப்படுகிறது.
தமிழக அரசனின் ஆணை எண் 166 நாள்: 23.06.2026 ல் சுகாதரத்துறை அறிவிப்பின் படி ஜீன் 22 2026 முதல் அரசு மருத்துவனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையுள்ள (22 காரட்) 916 BIS hallmarking முத்திரை உள்ள தங்கமோதிரங்கள் வழங்கும் திட்டத்தில் ஒரு வருடத்திற்கான அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிறக்கக்கூடிய 4.41 இலட்சம் குழந்தைகளுக்கு வழங்க ரூ 755.83 கோடி மதிப்பீட்டில் வழங்க உத்திரவிடப்பட்டது.
இதன் அடிப்படையில், இதற்கான கொள்முதல் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் திறந்தவெளி டெண்டர் முறையில் கோரப்பட்டது. இதில் 1 கிராம் தங்க மோதிரத்திற்கான செய்கூலி, காப்பீடு, பேக்கிங், போக்குவரத்து மற்றும் இதர செலவினங்கள் உட்பட (1 கிராம் தங்கம் விலை தவிர்த்து) விலையினை தெரிவிக்க கோரப்பட்டது.
இந்த ஒப்பந்தப்புள்ளியில் 11 நகை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். மோதிரத்திற்கான விலை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.
ஒன்று, 1 கிராம் தங்கத்திற்கான விலை, மற்றொன்று மோதிரத்திற்கான “செய்கூலி, காப்பீடு, பேக்கிங், போக்குவரத்து மற்றும் இதர செலவினங்கள்”. தங்கத்தின் விலையை பொறுத்த வரையில் கொள்முதல் ஆணை வெளியிடப்படும் அன்று நிலவும் “IBJA AM” rate எடுத்துக் கொள்ளப்படும். ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டது இரண்டாவது பகுதிக்கு மட்டுமே.
இதில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் மோதிரத்திற்கான செய்கூலி, காப்பீடு, பேக்கிங், போக்குவரத்து மற்றும் இதர செலவினங்களுக்கு தங்களது விலையாக ரூ.0.01 யை பதிவு செய்து L1 ஆக தேர்வானது. ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கும் கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்படும் நாளன்று நிலவும் 1 கிராம் தங்கத்தின் விலையை கொடுத்தாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து “செய்கூலி, காப்பீடு, பேக்கிங், போக்குவரத்து மற்றும் இதர செலவினங்களுக்கு”, L1 விலைக்கு ஒப்புதல் தெரிவிக்க L2 முதல் L11 வரை உள்ள நிறுவனங்களிடம் இசைவு கேட்கப்பட்டத்தில், L9 நிறுவனமான கல்யாண் நிறுவனம் மட்டுமே எழுத்து மூலமாக ஒப்புதல் தெரிவித்தது. ஆனால் L2 -L8 மற்றும் L10 மற்றும் L11 நிறுவனங்கள் தாங்கள் L1 விலைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை எழுத்து பூர்வமாக தெரிவித்தனர்.
மேலும் 4,41,677 தங்க மோதிரத்திற்கான கொள்முதல் நான்கு தவணைகளாக மேற்கொள்ளப்படும் என்று டெண்டரில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்தவெளி டெண்டர் விதிமுறைகள் 31(4) சரத்தின் படி (70:30) என்ற அடிப்படையில் முதல் தவணை கொள்முதல் ஆணையில் 1,28,499 தங்க மோதிரங்களுக்கு ஜோய் ஆலுக்காஸ் க்கு 89,949 (70%) மற்றும் கல்யாண் நிறுவனத்திற்கு 38,509 (30%) கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது.
மேலும் இரண்டாவது தவணை கொள்முதல் ஆணையிலும் 1,17,438 தங்க மோதிரங்களுக்கு ஜோய் ஆலுக்காஸ் க்கு 82,213 (70%) மற்றும் கல்யாண் நிறுவனத்திற்கு 35,225 (30%) கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது. இதேபோன்று மீதமுள்ள 1,95,818 தங்க மோதிரங்களுக்கு முன்று மற்றும் நான்காவது தவணையில் கொள்முதல் ஆணை வழங்கப்படும்.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசாணையில் ரூ.755.83 கோடி என்பது நிர்வாக ஒப்புதல் மட்டுமே. நிர்வாக அனுமதி பெறப்பட்ட பின் அதற்கான நிதி ஒதுக்கீடு ஆணை பெறப்படுவது வழக்கம், தற்போது இத்திட்டத்திற்காக ரூ.560 கோடி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே ரூ.0.01 என்பது தங்க மோதிரத்தின் மொத்த விலை அல்ல. அது செய்கூலி, காப்பீடு, பேக்கிங், போக்குவரத்து மற்றும் இதர செலவினங்களுக்கான விலை மட்டுமே. அடுத்தது ஏற்கனவே குறிப்பிட்டது போல தங்கத்தின் விலையாக கொள்முதல் ஆணை வெளியிடப்படும் அன்று நிலவும் “IBJA AM” rate எடுத்துக் கொள்ளப்படும். தங்கத்தின் இன்றைய விலையை கணக்கில் எடுத்துக் கொண்டு ரூ.136 கோடி ஊழல் என்று கூறுவது தவறானது எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand#தமிழகவெற்றிக்கழகம்#TVK
தனது நிகரற்ற நடிப்பாற்றலாலும், கம்பீரக் குரலாலும், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, திரையுலகின் இமயமாய் திகழ்ந்து, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளில் அவரது மகத்தான கலைப்பணியை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
வரலாற்று நாயகர்கள், புராண மாந்தர்கள், சமூகத்தின் எளிய மனிதர்கள் என அனைத்து கதாபாத்திரங்களையும் தன் அசாத்திய நடிப்பால் நம் கண்முன்னே நிறுத்தி, தமிழின் செழுமையையும் பெருமையையும் திரைப்படங்களின் வழியே உலகறியச் செய்து நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்.
அன்பு, பாசம், வீரம், கோபம், சோகம் போன்ற மானுட உணர்வுகளின் பரிமாணங்களைத் தனது நடிப்பால் வெளிப்படுத்திய நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் கலையுலகச் சாதனைகள் தலைமுறைகளைக் கடந்தும் தமிழ் மண்ணின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்!
#CMJosephVijay
தமிழக மக்கள் அனைவரும் கதர் ஆடைகளையும், கிராமப் பொருட்களையும் வாங்கி நூற்பாளர், நெசவாளர் மற்றும் கைவினைஞர் வாழ்வில் புத்தொளி பாய்ச்ச வேண்டும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வேண்டுகோள்
மகிழ்வுடன் அணிந்திடுவோம் கதராடைகளை!
வெற்றி பெறச் செய்வோம் நெசவாளர் வாழ்க்கைதனை!!
#CMJosephVijay
பகையாளிகளாக இருந்து பங்காளிகளானவர்களின் dealing!
“மதுராந்தகம் உனக்கு(தீயசக்தி)…
தாராபுரம் எனக்கு(மற்றும் பலர்)…
இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன், நீயும் வரக்கூடாது…”
என்று தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு, பங்காளிகள் இருவரும் இடைத்தேர்தலை சந்திக்கிறார்கள்.
திமுகவின் ஆபாசக் கொள்கையைத் தன் கொள்கையாய் ஏற்று துரோகச்சாமி ஒருபுறம் பிரச்சாரம் செய்ய, அதிமுகவைப் பற்றியோ, துரோகச்சாமியைப் பற்றியோ ஒரு வார்த்தைகூட உதிர்க்காமல் ஆபாசநதியை ஓடவிடுகிறார் ஆபாசநிதி.
“எதுக்கு வந்தோம் என்றதையே மறந்து முழு சமையல்காரனா மாறிட்ட” என்பது போல, எதற்காக எம்ஜிஆர் தனியாகக் கட்சி தொடங்கினார் என்பதையே மறந்து, அதிமுகவை திமுகவின் கிளைக் கழகமாக மாற்றி துரோகச் சாதனை படைத்திருக்கிறார் துரோகச்சாமி.
பங்காளிகளின் dealing கணக்குகளை, இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதி மக்களும் minus ஆக்குவார்கள் என்பது உறுதி!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!
அர்ச்சணாதேவி அழகுமலை - முத்து முனியாண்டி தம்பதியின் பெண் குழந்தை முத்து யாழினிக்கு, முதல் தாய்மாமனாக, முதல் தங்க சீராக, தாய்மாமன் தங்க மோதிரத்தை அணிவித்தார், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
"மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தீயசக்திக்கும், மற்றும் பலருக்கும் சரியான பாடம் புகட்டியே ஆகவேண்டும். உங்கள் சின்னம் விசில், நமது சின்னம் விசில், நம்முடைய வெற்றிச் சின்னம் விசில்" - மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்
127K Followers 882 FollowingA Dravidian Stock | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | “No culture can Live, if it attempts to be Exclusive” - Mahatma Gandhi
35K Followers 2K FollowingFreethinker. Dravidian stock. RTs≠endorsement. 60s, but mentally 40s, age of most of my friends😄.
PS: I may not argue my case, would rather walk away😊
51K Followers 2K FollowingRajya Sabha MP | People’s Voice | Joint Secretary Media Wing, DMK | Equality | Women Empowerment | Social Justice | Dravidian Stock | Tamil Nadu
20K Followers 1K FollowingState Convenor - IT & Social Media Department, Tamil Nadu Congress | Member, Election Manifesto Committee 2026 | Tamil | Entrepreneur | Tweets are personal
20 Followers 176 Following👥📢 மக்களுக்காக ஒரு குரல் ✊
🇪🇸 TVK குடும்பத்தின் பெருமைமிகு உறுப்பினர் 🇪🇸
விஜய் அண்ணாவின் வழியில் | TVKforTN | 🦚 𓆩♡𓆪 முருகன் அடிமை 𓆩♡𓆪 🐓🙇♂️
2K Followers 1K FollowingHonourable TN CM Thiru Joseph Vijay Avl goal is Corruption Free Government and பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் is the ultimate priority.
389 Followers 1K FollowingThalapathy ❤️🔥
Die-hard fan of Vijay | Proud & strong follower of TVK 💪❤️🔥stand with my Thalapathy and support his cause. ❤️🔥
Thalapathy வழியில், TVK உடன்!
42K Followers 549 FollowingDoctor | Ex-IRS | Humanist | Minister for Health, Medical Education and Family welfare - Govt of Tamil Nadu | பொதுச் செயலாளர் (கொள்கைப் பரப்பு)-தவெக.
143K Followers 1 FollowingOfficial Account of the Department of Information and Public Relations (DIPR), செய்தி மக்கள் தொடர்புத் துறை #Government_of_Tamil_Nadu | #தமிழ்நாடு_அரசு